ஆனையிறவுப் பகுதியில் இன்று மாலை (28 ) இடம்பெற்ற வீதி விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மோட்டார் சைக்கிளுடன் டிப்பர் வாகனம் மோதியே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. குறித்த விபத்தில் யாழ்ப்பாணம், வடமாராட்சி கிழக்கு ஆழியவளை பகுதியை சேர்ந்த 38 வயதான கந்தசாமி கலைரூபன் என்பவரே உயிரிழந்துள்ளார்.
குறித்த விபத்துத் தொடர்பான மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் மேற்க்கொண்டு வருகின்றனர்.
