இந்தியா – கர்நாடக மாநிலம் கொப்பல் மாவட்டத்தில் உள்ள குஷ்டகி தாலுகா கல்கேரி கிராமம் அருகே நெடுஞ்சாலையில் லொரி மீது கார் மோதி கோர விபத்து இடம்பெற்றுள்ளது.
குறித்த விபத்தில் இரண்டு குழந்தைகள் உட்பட சம்பவ இடத்திலேயே 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
குறித்த விபத்து தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்க்கொண்டு வருகின்றனர்.
விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையா இரங்கல் தெரிவித்ததுடன் 2 லட்சம் ரூபா நிவாரணம் வழங்குவதாக அறிவித்துள்ளார்.
