யாழ்ப்பாண சிறைச்சாலையின் கூரைக்கு மேலேறி போராட்டத்தில் ஈடுபட்ட சிறைக்கைதி ஒருவரின் போராட்டம் இன்று (28) நிறைவுக்கு வந்துள்ளது.
யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் இருந்து தன்னை வேறு ஒரு சிறைச்சாலைக்கு மாற்றுமாறு கோரி குறித்த கைதி கூரைக்கு மேல் ஏறி நேற்று உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்தார்.
நேற்று நண்பகல் ஆரம்பித்த குறித்த போராட்டமானது இரவு முழுவதும் தொடர்ந்த நிலையில், இன்று மதியம் நிறைவுக்கு வந்துள்ளது.
