தென்மராட்சி – மிருசுவில் பகுதியில் 6 வயதுச் சிறுமி ஒருவர் கிணற்றில் தவறுதலாக வீழ்ந்து நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
மிருசுவில் வடக்கைச் சேர்ந்த 6 வயதுடைய சசிகரன் சிம்சிகா என்ற சிறுமியே உயிரிழந்துள்ளார்.
குறித்த சிறுமியை காணாத நிலையில், மூன்று மணி நேரமாக தேடப்பட்ட நிலையில், நேற்று (27) மாலை 4 மணியளவில் சிறுமி கிணற்றுக்குள் விழுந்திருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது.
உடனடியாக சிறுமி மீட்கப்பட்டு கொடிகாமம் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் அவர் உயிரிழந்துள்ளதாக விசாரணைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழ் ஒளியின் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள https://chat.whatsapp.com/B8nqCxX2zg6GiQFhwMGzk0 லிங்கை அழுத்தி வட்ஸ்அப் குறுப்பில் இணைந்து கொள்ளுங்கள்.
