ஐ.பி.எல் திருவிழாவின் அஹமதாபாத் மைதானத்தில் நடைபெறும் இறுதிப்போட்டியில் குஜராத் அணி சென்னை அணிக்கு இமாலய இலக்கை நிர்ணயித்துள்ளது.
நாணய சுழற்சியில் வென்ற சென்னை அணி முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.
இதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாடிய குஜராத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 பந்துபரிமாற்றங்கள் நிறைவில் 4 இலக்குகளை இழந்து 214 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
குஜராத் அணி சார்பில் சாய் சுதர்சன் எனும் தமிழ் வீரர் 96 ஓட்டங்களை அதிகபட்சமாக அணிக்காக விளாசி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
இந்நிலையில் 215 என்ற வெற்றி இலக்கை நோக்கி சென்னை அணி துடுப்பெடுத்தாட களமிறங்கவுள்ளது.
