தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் வடமராட்சி கிழக்கு மகளிர் அணித்தலைவி சற்குணதேவி ஜெகதீஸ்வரனை எதிர்வரும் 7ஆம் திகதிவரை விளக்க மறியலில் வைக்குமாறு கிளிநொச்சி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 3 ஆம் திகதி நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கலந்து கொண்ட மக்கள் சந்திப்பில் ஏற்பட்ட குழப்பத்தின் போது பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்தார் என்ற குற்றச்சாட்டில் மகளிர் அணித்தலைவி இன்று காலை பொலிஸரால் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில் இன்று கைதுசெய்யப்பட்டு அவர் கிளிநொச்சி நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டார். பத்துக்கு மேற்பட்ட பொலிஸார் குறித்த நபருக்கு பிணை வழங்க வேண்டாம் என்ற வாதத்தின் அடிப்படையில், எதிர்வரும் 7 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.
