நாடாளுமன்ற உறுப்பினராக இருப்பதற்கு வெட்கப்படுகிறேன் என நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் நாடாளுமன்றத்தில் இன்று (07) முழங்கினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“வேட்பாளர் ஒருவர், எதிர்க் கட்சி தலைவராகவோ அல்லது தமிழ் நாடாளுமன்ற உறுப்பினராகவோ இருந்தாலும் பல்வேறு அரசியல் கருத்துக்களை அவர் பேசி இருந்தாலும் கூட பொலிசார் காலையில் மேற்கொண்ட விடயத்தை வன்மையாக கண்டிக்கின்றோம்.
இந்த நாடாளுமன்றத்தில் கொலை சம்மந்தமாக குற்றம் குற்றம் சாட்டப்பட்டவர்களை எல்லாம் பார்க்கின்றோம்.
சிவனேசத்துரை சந்திரகாந்தன் கொலையுடன் தொடர்பு உள்ளதாக குற்றம் சாட்டப்பட்ட போதும் சிறையில் இருந்து வெளிவந்து தற்போது மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டங்களுக்கு அனுமதிக்கப்படுகின்றார்.
கஜேந்திரகுமார் நாடாளுமன்றத்திற்கு வருவதற்கு அனுமதி வழங்கி இருக்க வேண்டும் என எதிர் கட்சி தலைவர் கேள்வி எழுப்பிய போதும் ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமைதி காத்தார்கள்.
அதனால், நாடாளுமன்ற உறுப்பினராக இருப்பதற்கு வெட்கப்படுகிறேன். நாளை உங்களுக்கும் இப்படியான சம்பவங்கள் ஏற்படலாம்.
இது உண்மையில் கஜேந்திரகுமாருக்கு மாத்திரம் தான் வடக்கு மாகாணத்தில் மாத்திரம் தான், என்று நினைத்துக்கொள்ள கூடாது” – என்றார்.
