வடமராட்சி – மந்திகை பகுதியில் மின்மாற்றியில் பொருத்தப்பட்டிருந்த மின்மானி அலகு பெட்டி தீப்பற்றி எரிந்துள்ளது.
இச்சம்பவம் இன்று (14) மாலைப்பொழுதில் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவத்தால் குறித்த பகுததியில் சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இந்நிலையில், தீப்பற்றிய தகவல் மின்சார சபை அலுவலகத்திற்கு அறிவக்கப்பட்டதை அடுத்து, அங்கு விரைந்து இலங்கை மின்சார சபை உத்தியோகத்தர்களால் மினசாரம் உடனடியாகவே துண்டிக்கப்பட்டு தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
