முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு சிறி சுப்பிரமணிய வித்தியாசாலை எனும் ஆரம்ப பாடசாலை அதிபரின் முன்மாதிரியான செயற்பாடு பலரின் பாரட்டுக்களைப் பெற்று வருவதோடு, சமூகவலைத்தளங்கில் வேகமாக வைரலாகி வருகின்றது.
குறித்த அதிபர் தன்னுடைய அலுவலகத்தை இயற்கையோடு ஒத்தவகையில், முற்று முழுதாக மரங்களால் அமைத்து, கிடுகினால் மேயப்பட்டு அலுவகலத்தை ஒழுங்கமைத்திருப்பது பார்ப்போரை பிரமிக்க வைக்கின்றது.
தற்போது வளர்ந்து வரும் நவீன யுகத்தில், பாடசாலைக் கட்டடங்கள் மற்றும் பாடசாலை அதிபரின் அலுவலகம் என்பன சகலவசதிகளோடு கூடிய வகையில் அமைக்கப்பட்டு வரும் நிலையில், குறித்த அதிபரின் செயற்பாடு அனைவரையும் வியக்கை வைத்திருக்கின்றது.
குறித்த பாடசாலையின் அதிபரின் அலுவலகமானது பாடசாலை நுழைவாயிலுக்கு அருகில் அமைக்கப்பட்டுள்ளது.
குறித்த பாடசாலைக்கு நாடாளுமன்ற உறுப்பினர் மனோகணேசன் விஜயம் செய்து அதிபருக்கு பாராட்டுக்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
