தமிழ் தேசிய மக்கள் முன்னணி செயற்பாட்டாளர்கள் கைது
தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் மகளிர் அணித் தலைவி வாசுகி சுதாகர், யாழ் மாவட்ட அமைப்பாளர் தீபன் திலீசன், மகளிர் அணி செயற்பாட்டாளர் கிருபா கிரிதரன் ஆகியோர் பொலிஸாரால் இன்று (15) கைது செய்யப்பட்டுள்ளனர்.
மருதங்கேணி விவகாரம் தொடர்பில் விசாரணைக்காக கிளிநொச்சி பொலிஸ் நிலையத்திற்கு அழைக்கப்பட்ட நிலையில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
