யாழ்ப்பாணம் – திருநெல்வேலிப் பகுதியில் வாளினை இடுப்பில் செருகிக்கொண்டு சுற்றித்திரிந்த இளைஞன் ஒருவர் பொலிஸரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஆட்களினை வெட்டுவதற்குப் பயன்படுத்தப்படும் வாளினை வைத்துக்கொண்டு திரிவதாக இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த கைது இடம்பெற்றுள்ளது.
நேற்றுமாலை 6.00 மணியளவில் இராணுவப் புலனாய்வாளர்களால் கைது செய்யப்பட்ட குறித்த இளைஞன் கோப்பாய் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
