மன்னார்- நானாட்டான் – அச்சங்குளம் பகுதியில் நேற்று (17) காலை இடம்பெற்ற கொலைவெறித் தாக்குதல் சம்பவத்தில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இக்கொலைச் சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
குறித்த இளைஞனின் சகோதரர் ஒருவர் 23 அச்சங்குளம் பகுதியைச் சேர்ந்த யுவதி ஒருவரை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில், நேற்று (17) காலை குறித்த யுவதியின் வீட்டுக்குச் சென்ற குறித்த இளைளுனை குறித்த யுவதியின் உறவினர்கள் கடுமையாக தாக்கியுள்ளனர்.
தாக்குதலில் காயமடைந்த குறித்த இளைஞர் மன்னார் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தனது சகோதரர் தாக்கப்பட்ட விடயம் அறிந்த 25 வயதுடைய இளம் குடும்பஸ்தரான குறித்த இளைஞன் குறித்த யுவதியின் வீட்டுக்குச் சென்றுள்ளார்.
இதன் போது குறித்த யுவதியின் உறவினர்களுக்கும், தாக்குதலுக்குள்ளான இளைஞனின் சகோதரனுக்கும் இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் முற்றி கைகலப்பாக மாறியது.
இதன் போது குறித்த இளம் குடும்பஸ்தரான இளைஞன் மீது கூரிய ஆயுதத்தினால் தலையில் தாக்குதல் மேற்க்கொள்ளப்பட்டுள்ளது.
இதன் போது படுகாயமடைந்த
குறித்த இளம் குடும்பஸ்தர் நானாட்டான் பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் அச்சங்குளம் பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய ஒரு குழந்தையின் தந்தை என குறிப்பிடப்பட்டுள்ளது.
கொலை தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை முருங்கன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
