பண்டாரகம பகுதியில் இன்று (22) அதிகாலை இடம்பெற்ற வீதி விபத்தில் 3 வயது சிறுமி ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.
இராணுவத்தின் பாவணையில் உள்ள பேருந்தும் ஸ்கூட்டரும் மோதியே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
விபத்தில் படுகாயமடைந்த தாயும், சிறுமியும் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டனர். எனினும் சிறுமி ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்தனர்.
