மட்டக்களப்பு – வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆனைகட்டியவெளி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றொரு இளைஞர் படுகாயமடைந்துள்ளார்.
ஆலயம் ஒன்றுக்கு சென்றுவிட்டு திரும்பிக் கொண்டிருந்தபோதே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த விபத்தில் 35ஆம் கொலனி, பக்கியல்ல பகுதியை சேர்ந்த சச்சி என்னும் 19 வயதுடைய இளைஞன் உயிரிழந்துள்ளார். அத்துடன், 23 வயதுடைய ச.லோஜன் என்னும் இளைஞர் படுகாயமடைந்துள்ளார்.
குறித்த விபத்து தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்க்கொண்டு வருகின்றனர்.
