கதிர்காமத்திற்கு பாத்திரை சென்ற அடியவர் ஒருவர் பாம்பு தீண்டி உயிரிழந்த சம்பவம் நேற்று (22) உயிரிழந்துள்ளார்.
பொத்துவில் உகந்தை முருகன் ஆலயத்தில் இருந்து கதிர்காமத்துக்கு காட்டுவழியாக பாதை யாத்திரை சென்ற அடியவர் ஒருவரே பாம்பு தீண்டி உயிரிழந்துள்ளார்.
குமுக்கன் வனப்பூங்கா இந்துகோவில் பகுதியில் பாம்பு தீண்டியதில் மயக்கமடைந்த குறித்த அடியவர் வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற நிலையில் அவர் உயிரிழந்துள்ளதாக திருக்கோவில் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தம்பிலுவில் பிரதேசத்தைச் சேர்ந்த 45 வயதுடைய லிங்கசாமி கேதீஸ்வரன் என்ற குடும்பஸ்தரே உயிரிழந்துள்ளார்.
