தென்மராட்சியின் வீரர்களுக்கு களம் அமைக்கும் நோக்கில் ஆரம்பமாகி பிரமாண்டமாக இடம்பெற்று வந்த TBBL துடுப்பாட்டச் சுற்றுப்போட்டியின், இறுதிப்போட்டி எதிர்வரும் 25 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கோலாகலமாக இடம்பெறவுள்ளது.
மட்டுவில் தெற்கு வளர்மதி விளையாட்டு மைதானத்தில் மாலை 2.00 மணியளவில் இறுதிப்போட்டி TBBL குழுமத் தலைவர் க.அமல்ராஜ் தலைமையில் இடம்பெறவுள்ளது.
பத்து அணிகள் மோதிய இத்தொடரில் இறுதிப்போட்டியில் பலம் பொருந்திய Madduvil Super Gillies அணியை எதிர்த்து நாவற்குழி Big footers அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது.
இப்போட்டிக்கு பிரதம விருந்தினராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், உதயன் பத்திரிகை நிறுவனத்தின் நிர்வாக இயக்குநருமான ஈஸ்வரபாதம் சரவணபவன் கலந்து சிறப்பிக்க உள்ளார்.
சம்பியன் கிண்ணத்தை தூக்கப்போகும் அணிக்கு ஐந்து லட்சம் பிரமாண்ட பரிசுத்தொகை வழங்கப்படவுள்ளது.
அனல் பறக்கும் ஆட்டத்தை கண்டுகளிக்க மட்டுவில் வளர்மதி விளையாட்டு மைதானத்திற்கு விரைந்திடுங்கள்.
