யாழ்ப்பாணத்திற்கு மூன்று நாள் விஜயம் மேற்க்கொண்டுள்ள முன்னாள் ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேனா இலங்கைத் தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசாவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
வலி.வடக்குப் பகுதியில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வுகளில் கலந்து கொண்டதன் பின்னர் வரும் வழியில் மாவிட்டபுரத்தில் அமைந்துள்ள தமிழரசு கட்சியினுடைய தலைவர் மாவை சேனாதிராஜா இல்லத்திற்கு
இன்று இரவு 7 மணி அளவில் திடீரென சென்று சந்தித்துள்ளார்.
குறித்த சந்திப்பில் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், முன்னாள் வெளிவிவகார அமைச்சர் சயின் வாஸ் குணவர்தன உட்பட பலர் கலந்து கொண்டனர்.
