பாடசாலைக்கு கைத்தொலைபேசியை கொண்டு சென்றதால் பெற்றோரை அழைத்து வருமாறு தெரிவித்தமையால் மாணவி ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
இச்சம்பவத்தில், கலென்பிந்தனுவெவ பகுதியைச் சேர்ந்த தரம் – 10 இல் கல்வி கற்கும் மாணவி ஒருவரே உயிரை மாய்த்துள்ளார்.
கடந்த 4 ஆம் திகதி மாணவி கைத்தொலைபேசியை பாடசாலைக்கு கொண்டு சென்றுள்ளார். இந்நிலையில் அதிபர் கைத்தொலைபேசியை பறித்துள்ளார்.
குறித்த மாணவியின் சகோதரனிடம் நாளை பெற்றோரை அழைத்து வருமாறு அதிபர் தெரிவித்துள்ளார். இதனால் அச்சம் அடைந்த குறித்த மாணவி கிருமி நாசினி மருந்தை அருந்தி தற்கொலை செய்து கொண்டுள்ளதாக முதல் கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
