யாழ்ப்பாணம் – கோப்பாய் சந்திப் பகுதியில் இன்று (14) இடம்பெற்ற வாகன விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
சமிக்ஜை விளக்கு ஒளிர்ந்த பின்னும் கட்டுப்பாட்டை மீறி பயணித்த டிப்பர் வாகனம் மோதி சமுர்த்தி முகாமையாளர் ஒருவர் படுகாயமடைந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின் உயிரிழந்தார்.
கோப்பாய் பகுதியை சேர்ந்த 52 வயதுடைய பெண் சமுர்த்தி முகாமையாளரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸார் க மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
