வடமராட்சி – கொற்றாவத்தை பகுதியில் டிப்பர் வாகனமும் மோட்டார் சைக்கிளும் மோதி ஏற்பட்ட விபத்தில் 14 வயது சிறுவன் ஒருவர் உயிரிழந்ததுடன், இளைஞர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
இப்பயங்கர சம்பவம் இன்று (24) பதிவாகியுள்ளது. வளைவொன்றில் டிப்பர் வாகனமும் மோட்டார் சைக்கிளும் மோதியே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. குறித்த விபத்தில் மோட்டார் சைக்கிள் தீப்பற்றி எரிந்துள்ளது.
குறித்த விபத்தில் 14 வயது சிறுவன் தீயில் எரிந்த நிலையில் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அத்துடன் 22 வயதுடைய இளைஞர் படுகாயமடைந்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்க்கொண்டு வருகின்றனர்.
