வடமராட்சி – கம்பர்மலை யங்கம்பன்ஸ் விளையாட்டுக் கழகம் நடாத்தும் யாழ.மாவட்ட ரீதியிலான குழுநிலைப் போட்டியில் அனல் பறந்த ஆட்டத்தில் நாவந்துறை சென்.மேரிஸை வீழ்த்தி அட்டகாசமான வெற்றியை ஊரெழு றோயல் பதிவு செய்தது.
இன்று (14) மின்னொளியில் இடம்பெற்ற போட்டியில் யாழ்.மாவட்டத்தில் அசுர பலம் கொண்ட சென்.மேரிஸ் மற்றும் றோயல் பலப்பரீட்சை நிகழ்த்த களம் கண்டன.
போட்டியின் ஆரம்பம் முதலே இரு அணிகளும் விறுவிறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த போட்டியின் ஜந்தாவது நிமிடத்திலேயே முதலாவது கோலினை பதிவு செய்து றோயலுக்கு அதிர்ச்சி அழித்தது சென்.மேரிஸ்.
தொடர்ந்தும் விறுவிறுப்பாக இரண்டு அணிகளும் களமாட றோயல் தமக்கு கிடைத்த சந்தர்ப்பங்களைத் தவறவிட இரண்டாவது கோலினையும் பதிவு செய்தது சென்.மேரிஸ்.
தொடர்ந்து எழுச்சி கொண்டு விறுவிறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய றோயல் முதலாவது கோலினை பதிவு செய்ய ஆட்டம் அனல் பறந்தது. இந்நிலையில் இரண்டாவது கோலினையும் றோயல் பதிவு செய்ய 2 : 2 என்ற கோல்கணக்கில் முற்பாதியாட்டம் நிறைவுக்கு வந்தது.
இரண்டாவது பாதியாட்டத்தில் இரண்டு அணிகளும் அனல் பறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த போட்டி தூள் பறந்தது. இந்நிலையில் றோயல் மூன்றாவது கோலினையும் பதிவு செய்தது.
தொடர்ந்தும் போட்டியை சமனிலை படுத்த சென்.மேரிஸின் முயற்சியை தகர்த்து இறுதியில் 3:2 என்ற கோல்கணக்கில் ஊரெழு றோயல் வெற்றி பெற்றது.
போட்டியின் ஆட்ட நாயகனாக றோயல் அணியைச் சேர்ந்த எடிசன் தெரிவு செய்யப்பட்டார். குறித்த குழுநிலை முதலாவது போட்டியில் இளவாலை யங்கென்றிஸ் அணியை றோயல் அணி வெற்றி பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
