கைதடி குமரநகர் சனசமூக நிலையத்தின் 67வது ஆண்டு விழாவை முன்னிட்டு சனசமூக நிலையத்தினரால் மாபெரும் நடனப்போட்டி நடத்தப்படவுள்ளது.
பரதநாட்டியம் (தனி), டிஸ்கோ டான்ஸ் (தனி) , டிஸ்கோ டான்ஸ் குழு போன்ற பிரிவுகளில் குறித்த நடனப்போட்டி இடம்பெறவுள்ளது.
எந்தப்பிரதேசத்தில் இருந்து 10 வயதுக்கு மேற்பட்டவர்கள் குறித்த போட்டியில் பங்குபற்ற முடியும். குறித்த நடனப்போட்டிகளில் பங்கு பற்ற விரும்புபவர்கள் எதிர்வரும் 19ஆம் திகதிக்குள் பதிவுகளை மேற்க்கொள்ள வேண்டுமென ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர்.
ஒவ்வொரு பிரிவிலும் தெரிவு செய்யப்படும் ஐந்து போட்டியாளர்கள் இறுதிப்போட்டியில் பங்குபற்ற வேண்டும். இறுதிப்போட்டியில் மூவர் தெரிவுசெய்யப்பட்டு பரிசில்கள் வழங்கப்படுமென குறிப்பிடப்பட்டுள்ளது.
இப்போட்டி தொடர்பான மேலதிக தொடர்புகளுக்கு,
0773911765
0773538457 ஆகிய தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளவும்.
