ATL பிறிமீயர் லீக்கினால் நடத்தப்பட்டுவரும் பத்து அணிகள் பங்குபற்றி இடம்பெற்று வரும் துடும்பாட்டத்தொடரில் இது வரை இரண்டு வார போட்டிகள் நிறைவுக்கு வந்துள்ளன.
குறித்த தொடரானது அச்செழு வளர்மதி விளையாட்டு மைதானத்தில் ஆரம்பமாகி சிறப்பாக இடம்பெற்று வருகின்றது.
அந்தவகையில், இதுவரை நடைபெற்று முடிவடைந்த போட்டிகளின் நிலவரங்களை தொகுத்து தருகின்றோம்.
ஊரோழு றோயல் அணி தொடர்ச்சியாக பங்குபற்றிய ஐந்து போட்டிகளிலும் வெற்றி பெற்று 10 புள்ளிகளுடன் முன்னிலையில் உள்ளது. றோயல் அணிக்கு ஈகிள்ஸ், பைங்கரன், நீர்வை பசங்க, சிறுப்பிட்டி கலைமகள் அணிகளுடன் மீதமான போட்டிகள் உள்ளன.
அச்செழு ஸ்ரைக்கேர்ஸ் அணி 6 போட்டிகளில் பங்குபற்றி 4 போட்டிகளில் வெற்றி பெற்று 8 புள்ளிகளுடன் இரண்டாவது நிலையில் உள்ளது. குறித்த அணிக்கு கலைமகள், வயல்வோல்ஸ், நீர்வை பசங்க அணிகளுடன் மீதமான போட்டிகள் உள்ளன.
மயிலங்காடு ஞானமுருகன் அணி 6 போட்டிகளில் பங்குபற்றி 3 போட்டிகளில் வெற்றி பெற்று 6 புள்ளிகளுடன் 3 வது நிலையில் உள்ளது. பவர் கிற்றர்ஸ், வயல் வோய்ஸ், நீர்வை பசங்க அணிகளுடன் ஞானமுருகன் அணி மீதமான போட்டிகளில் மோதவுள்ளது.
உரும்பிராய் ஈகிள்ஸ் 6 போட்டிகளில் மோதி 3 போட்டிகளில் வெற்றி பெற்று 6 புள்ளிகளுடன் நான்காவது நிலையில் உள்ளது. மீதமாக றோயல், வயல்வோல்ஸ், கலைமகள் ஆகிய அணிகளுடன் மோதவுள்ளது.
அச்செழு பவர் கிற்றர்ஸ் 5 போட்டிகளில் மோதி 3 இல் வெற்றி பெற்று 6 புள்ளிகளுடன் அடுத்த நிலையில் உள்ளது. பவர் கிற்றர்ஸ் மீதமாக ஞானமுருகன், வயல் வோல்ஸ், ஸ்பாட்டன், பைங்கரன் ஆகிய அணிகளுடன் மோதவுள்ளது.
அச்செழு ஸ்பாட்டன் 6 போட்டிகளில் மோதி 3 போட்டிகளில் வெற்றி பெற்று 6 புள்ளிகளுடன் 6 வது நிலையில் உள்ளது. மீதமாக பவர் கிற்றர்ஸ், கலைமகள், நீர்வை பசங்க ஆகிய அணிகளுடன் மோதவுள்ளது.
வயல்வோல்ஸ் அணி 5 போட்டிகளில் பங்குபற்றி 2 போட்டிகளில் வெற்றி பெற்று 4 புள்ளிகளுடன் அடுத்த நிலையில் உள்ளது. வயல் வோல்ஸ் அணி ஈகிள்ஸ், ஞானமுருகன், பவர் கிற்றர்ஸ், ஸ்ரைக்கேர்ஸ் ஆகிய அணிகளுடன் மோதவுள்ளது.
நீர்வை பசங்க 5 போட்டிகளில் பங்குபற்றி 2 போட்டிகளில் வெற்றி பெற்று 4 புள்ளிகளுடன் 8 வது நிலையில் உள்ளது. மீதமாக றோயல், ஸ்ரைக்கேர்ஸ், ஞானமுருகன், ஸ்பாட்டன் ஆகிய அணிகளுடன நீர்வை பசங்க மோதவுள்ளது.
உரும்பிராய் பைங்கரன் 7 போட்டிகளில் மோதி 2 போட்டிகளில் வெற்றி பெற்று 4 புள்ளிகளுடன் அடுத்த நிலையில் உளளது. பைங்கரன் மீதமாக றோயல், பவர் கிற்றர்ஸ் அணிகளுடன் களமாடவுள்ளது.
சிறுப்பிட்டி கலைமகள் 5 போட்டிகளில் பங்குபற்றி ஒரு போட்டியில் வெற்றி பெற்று 2 புள்ளிகளுடன் இறுதி நிலையில் உள்ளது. கலைமகள் மீதமாக றோயல், ஸ்பாட்டன், ஸ்ரைக்கேர்ஸ, ஈகிள்ஸ் ஆகிய அணிகளுடன் மோதவுள்ளது.
